sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாலையில் பூசணிக்காய் உடைப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

சாலையில் பூசணிக்காய் உடைப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் பூசணிக்காய் உடைப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் பூசணிக்காய் உடைப்பு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : அக் 12, 2024 02:38 AM

Google News

ADDED : அக் 12, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சாலையில் திருஷ்டி பூசணிக்காய்கள் உடைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, படுகாயமடைந்தனர்.

புதுச்சேரியில் ஆயுத பூஜை நேற்று அனைத்து பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வீடு, கடைகள், வணிக நிறுவனங்களில் பூஜைகள் செய்து, திருஷ்டி பூசணிக்காய் கழிக்கப்பட்டது.

திருஷ்டி பூசணிக்காயை சாலையில் உடைக்க வேண்டாம். அதன் மீது வாகனங்கள் ஏறினால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் என நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள் ஏற்கனவே பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்திருந்தன.

ஆனால், பொதுமக்கள், வணிகர்கள் இந்த வேண்டுகோளை கண்டுக்கொள்ளவில்லை. எதை பற்றியும் கவலைப்படாமல் சாலையில் வழக்கம்போல் திருஷ்டி பூசணிக்காயை உடைத்து சிதறவிட்டனர்.

சாலையில் சிதறி கிடந்த இந்த பூசணிக்காய்கள் வாகன ஓட்டிகளுக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்தனன.

பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகளை சந்தித்தனர்.






      Dinamalar
      Follow us