/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் கொட்டிய 'வேஸ்ட்' ஆயில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்
/
சாலையில் கொட்டிய 'வேஸ்ட்' ஆயில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்
சாலையில் கொட்டிய 'வேஸ்ட்' ஆயில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்
சாலையில் கொட்டிய 'வேஸ்ட்' ஆயில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 27, 2025 07:36 AM

காரைக்கால் : திருப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் வேஸ்ட் ஆயில் கொட்டியதால் வாகனம் ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.
காரைக்கால், திருப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று இரவு அம்பாள்சத்திரம் பகுதியில் தனியார் தொழிற்சாலையிலிருந்து லாரி ஒன்று வேஸ்ட் ஆயில் ஏற்றி சென்றது.
லாரியில் கசிவு ஏற்பட்டு, ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு ஆயில் சாலையில் கொட்டி சென்றது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பலர் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். சாலையில் மின் விளக்கு இல்லாததால் விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டது.
தகவல் அறிந்த நிரவி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை ஊழியர்கள் இரண்டு வாகனங்கள் உதவியுடன் சாலையில் கொட்டி கிடந்த ஆயிலை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.