/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சாரியா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
ஆச்சாரியா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜன 12, 2024 03:40 AM

புதுச்சேரி: ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
வில்லியனூர் ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆச்சாரியா கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன், வழிகாட்டுதலின்படி, கல்லூரி முதல்வர் முனைவர் குருலிங்கம் , ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் வீரேந்திர ரேஸ் (veranda race) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு திறன் மேம்படுத்தும் சிறப்பு பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் அளிக்கப்படும்.
மேலும் கல்லூரியின் இன்டஸ்டரி இன்ஸ்ட்டியூட் பார்டனர்ஷிப் செல் மூலம் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சென்னை நானோ டெக்னாலஜீஸ் சென்னை லியோ ராயல் டெக்சர்வ் தொழிற்சாலைகளுடன் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆச்சாரியா பொறியியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குழு தலைவர் ஆனந்த் தலைமையிலான குழு செய்திருந்தனர்.