/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மலையேற்ற வீராங்கனை அமைச்சரிடம் வாழ்த்து
/
மலையேற்ற வீராங்கனை அமைச்சரிடம் வாழ்த்து
ADDED : அக் 30, 2025 06:52 AM

திருக்கனுார்: இமயமலையில் அட்வான்ஸ் செகண்ட் வெலல் மலை ஏறும் பயிற்சி முடித்த மலையேற்ற வீராங்கனை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற் றார்.
புதுச்சேரி அடுத்த கூனிச்சம்பட்டைச் சேர்ந்தவர் திவ்யா,29. மலையேற்ற வீராங்கனையான இவர் மத்திய பாதுகாப்பு அமைச்சகரத்தின் கீழ் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் டிராங்கில் உள்ள தேசிய மலையேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளையாட்டு நிறுவனத்தில் மலையேறுதல் மற்றும் பனிப்பாறை பயிற்சி பெற்றுள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள கார்டியன் கிரிபெர்மி மலையேறுதல் நிறுவனத்தில் அடிப்படை மற்றும் மேம்பட்ட பாறை ஏறுதல் பயிற்சியையும் முடித்துள்ளார்.
ஐரோப்பா கண்டம் ரஷ்யாவில் உள்ள 5,642 மீட்டர் உயரம் கொண்ட மலையான மவுண்ட் எல்ப்ரஸ் மலையை ஏறி சாதனை படைத்தார்.
தொடர்ந்து இவர், இமயமலையில் அட்வான்ஸ் செகண்ட் லெவல் மலை ஏறும் பயிற்சி முடித்துள்ளார். அதனை இந்திய மலை ஏறும் ராணுவ பிரிவு அதிகாரிகள் அங்கீகரித்து, பேட்ஜ் வழங்கியுள்ளனர்.
ராணுவ அதிகாரிகளால் பேட்ஜ் பெற்ற வீராங்கனை திவ்யா, அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

