/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்ட் உத்தரவை மீறி செயல்படும் வங்கிகள் செல்வகணபதி எம்.பி., குற்றச்சாட்டு

ADDED : டிச 14, 2024 03:34 AM
புதுச்சேரி: வங்கிகள் கோர்ட் உத்தரவை மீறி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிவாரண தொகை வழங்க மறுப்பதாக, செல்வ கணபதி எம்.பி., குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
அரசு உத்தரவின் அடிப்படையில், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய மூன்று பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் புயல் நிவாரணம் வரவு வைக்கப்பட்டது.
சில வங்கிகள், அவர்கள் தரப்பில் கடன் காரணமாக, அங்கு கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு நிவாரண தொகையை செலுத்தாமல், வேண்டுமென்றே தவிர்த்து வருவதாக, மக்களிடம் இருந்து பல புகார்கள் வந்துள்ளன.
இந்த நேரத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, வரவு வைக்கப்படும், புயல் நிவாரண நிதி, அவர்களின் வங்கிக்கடன் மற்றும் கணக்கில் உள்ள நிலுவை தொகைக்கு எதிராக வரவு வைக்கக்கூடாது என, கோர்ட் உத்தரவு உள்ளது.
இதனை மீறி சில வங்கிகள் நிவாரண தொகை வழங்க மறுக்கின்றன. புயல் நிவாரண நிதியை வங்கிகடன் மற்றும் நிலுவை தொகைகளுக்கு எதிராக வரவு வைக்க வேண்டாம்.
அந்த தொகையை உடனடியாக விடுவிக்க, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் அனைத்து வங்கிகளுக்கும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.