தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரிக்கு தனி துணை தேர்வு ஆணையம் வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்

புதுச்சேரிக்கு தனி துணை தேர்வு ஆணையம் வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்

புதுச்சேரிக்கு தனி துணை தேர்வு ஆணையம் வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்


ADDED : மார் 27, 2025 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு தனி துணை தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை வைத்துள்ளார்.

புதுச்சேரி லோக்சபா எம்.பி., வைத்திலிங்கம், லோக்சபாவில் பேசியதாவது:

புதுச்சேரிக்கு தனி தேர்வு வாரியம் இல்லாத சூழலில், குரூப் ஏ, குரூப் பி பதவிகள் அனைத்தும் மத்திய தேர்வாணையத்தின் மூலமாக அகில இந்திய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதனால், புதுச்சேரி மக்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது. நிறைய பணியிடங்களில் பிராந்திய மொழி அறியாத அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் நியமிக்கப்படுகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி எண் 315ன் படி அனைத்து மாநிலங்களிலும் தனி தேர்வாணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், புதுச்சேரிக்கு என்று தனி தேர்வாணையம் இல்லாத சூழ்நிலையில் மத்திய தேர்வாணையத்தின் மூலமாகத் தான் விரிவுரையாளர்களும், பள்ளி முதல்வர்களும், மருத்துவர்களும் நியமிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரிக்கென தனி தேர்வாணையம் இருக்கும் பட்சத்தில் பிராந்திய மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிக்க ஏதுவாக இருக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் யூனியன் பிரதேசங்களில் தனித் தேர்வாணையம் அமைக்க வழிவகை செய்யாவிட்டாலும், தலைநகர் டில்லியில் தனி துணை தேர்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கென ஒரு தனி துணை தேர்வு வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us