/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை
/
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை
ADDED : டிச 05, 2024 06:40 AM
புதுச்சேரி: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள, 18 மீனவர்களை விடுவிக்க, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை வைத்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த, 18 மீனவர்கள், கடந்த ௧ம் தேதி மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த, 2ம் தேதி இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து சென்று, அந்த நாட்டிலேயே வைத்துள்ளனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த மீனவர்கள் மற்றும் அவர்களுடன் சேர்த்து பிடிக்க விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்து அவர்களை சொந்த ஊருக்கு மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஜெய்சங்கரை சந்தித்து, வைத்திலிங்கம் எம்.பி., கடிதம் அளித்தார்.