/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.பி.எல்., டி20 கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் 3ம் தேதி நடக்கிறது

ADDED : நவ 01, 2024 05:27 AM
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு பிரீமியர் கிரிக்கெட் லீக் டி 20 போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 3ம் தேதி திருக்கனுாரில் நடக்கிறது.
புதுச்சேரி மாநில கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக ஐ.பி.எல்., டி 20 பாணியில், கிராமபுற இளைஞர்களின் திறமையை மேம்படுத்த மண்ணாடிப்பட்டு தொகுதியை சார்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கான 'மண்ணாடிப்பட்டு பிரீமியர் கிரிக்கெட் லீக் டி20' (எம்.பி.எல். டி 20) போட்டிகள் வரும் ஜனவரி 12ம் தேதி துவங்குகிறது.
இப்போட்டியில் கெத்து காங்கேயன்ஸ், ஜல்லிக்கட்டு காளையன்ஸ், மின்னல் வீரர்கள், சங்கராபரணி கொம்பன்ஸ், தமிழ் தலைவாஸ், வேல்ஸ் வீரர்கள், வெற்றி தளபதிஸ், வெற்றி வீரன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
அந்த அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏல நிகழ்வு வரும் 3ம் தேதி திருக்கனுார் தனியார் கல்வி நிறுவனத்தில் நடக்கிறது. இதற்காக, தொகுதியில் உள்ள 378 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர். ஏற்பாடுகளை எம்.பி.எல்., டி20 கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.