தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நமது அம்மா நாளிதழில் மீண்டும் பழனிசாமி பெயர்

நமது அம்மா நாளிதழில் மீண்டும் பழனிசாமி பெயர்

நமது அம்மா நாளிதழில் மீண்டும் பழனிசாமி பெயர்


UPDATED : மே 28, 2026 06:38 PM

ADDED : மே 28, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2026 06:38 PM ADDED : மே 28, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-: தேர்தலுக்குப்பின், அ.தி.மு.க.,வில் பழனிசாமி, வேலுமணி என இரு அணிகளாக பிரிந்து மீண்டும் ஒன்றிணைந்த நிலையில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழிலில் பொதுச்செயலாளர் பழனிசாமியின் பெயர் மீண்டும் இடம் பெற்றுள்ளது.

அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கட்சியின் 'நமது அம்மா' நாளிதழின் நிறுவனராக பழனிசாமி பெயர் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு, பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் அ.தி.மு.க., பிளவுபட்டது.

அதனை தொடர்ந்து, நமது அம்மா நாளிதழில் பழனிசாமியின் பெயர் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் எஸ்.பி.,வேலுமணி பெயர் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், வேலுமணி தரப்பினர் பழனி்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது சமரசமாகி விட்டனர்.அதனையடுத்து, நமது அம்மா நாளிதழின் நிறுவனராக பழனிசாமி, வேலுமணி ஆகிய இருவரின் பெயர்கள் சேர்ந்து இடம் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us