/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எஸ்.சுவாமிநாதன் நுாற்றாண்டு சிறப்பு கருத்தரங்கம்
/
எம்.எஸ்.சுவாமிநாதன் நுாற்றாண்டு சிறப்பு கருத்தரங்கம்
எம்.எஸ்.சுவாமிநாதன் நுாற்றாண்டு சிறப்பு கருத்தரங்கம்
எம்.எஸ்.சுவாமிநாதன் நுாற்றாண்டு சிறப்பு கருத்தரங்கம்
ADDED : ஆக 21, 2025 11:43 PM

புதுச்சேரி: புதுச்சேரி எம்.எஸ்., சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் உயிரி கிராம வள மையத்தில், எம்.எஸ்.சுவாமிநாதனின் 100வது பிறந்த நாளையொட்டி, சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
டாக்டர் சரவணன் வரவேற்று, துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக காமராஜர் வேளாண் அறிவியல் நிலையமுதன்மை ஆசிரியர் விஜயகுமார், புதுச்சேரி நபார்டு வங்கி மாவட்ட மேம்பாட்டு மேலாளர் சித்தார்த், புதுவை பாரதியார் கிராம வங்கி பொது மேலாளர் ரகு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் விஜயகுமார் 'பசுமை புரட்சிக்காக பல தொழில்நுட்பத்தை புகுத்தி விளைச்சலை அதிகரித்த சுவாமிநாதன் பின்னாளில் விளைச்சல் மட்டுமல்லாது தரத்தை அதிகரிக்க கூடிய தொழில்நுட்பத்தை விவசாயிகள் கையாளவேண்டும். அதுவே உயிரின மகிழ்ச்சி என்று கூறியதை நினைவு கூர்ந்தார்.
பிள்ளையார்குப்பம் விவசாயி அர்ஜூனன்,ஜானகி, இன்னுயிர் கிராம சங்க மேலாண் இயக்குனர் ஜெயலட்சுமி, கிராம அறிவு மைய மேலாண்மை குழு உறுப்பினர் சுந்தரி,பனித்திட்டு கிராம மைய பொறுப்பாளர் அகிலா ஆகியோர் பேசினர்.
ஒருங்கிணைப்பாளர் கிரிஜா, ஆராய்ச்சி மையம் எவ்வாறு மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு உதவியாக உள்ளது என, விளக்கினார்.
லுார்துசாமி நன்றி கூறினார்.