/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.டி.எஸ்.,3ம் கட்ட கலந்தாய்வு: 34 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு
/
எம்.டி.எஸ்.,3ம் கட்ட கலந்தாய்வு: 34 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு
எம்.டி.எஸ்.,3ம் கட்ட கலந்தாய்வு: 34 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு
எம்.டி.எஸ்.,3ம் கட்ட கலந்தாய்வு: 34 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு
ADDED : ஆக 19, 2025 07:42 AM
புதுச்சேரி : எம்.டி.எஸ்., படிப்பிற்கு மூன்றாம் கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி சென்டாக் சீட் ஒதுக்கீடு செய்துள்ளது.
சீட் கிடைத்த மாணவர்கள் தங்களுடைய மாணவர் சேர்க்கை கடிதத்தை டவுண்லோடு செய்து கொண்டு, வரும் 20 ம் தேதி மாலை 5 மணிக்குள் அசல் சான்றிதழ்களை சமர்பித்து சேர வேண்டும்.
இந்த மூன்றாம் கட்ட கலந்தாய்வில் சீட் கிடைக்காத மாணவர்கள் தங்களுடைய பதிவு கட்டணம் திரும்ப கிடைக்கும். ஆனால் மூன்றாம் கட்ட கலந்தாய்வு சீட் கிடைத்த மாணவர்கள் அக்கல்லுாரியில் சேரவில்லையெனில், கட்டிய பதிவு கட்டணம், டியூஷன் கட்டணம் திரும்ப கிடைக்காது.
மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரி அரசு ஒதுக்கீட்டில்-9, நிர்வாக ஒதுக்கீட்டில்-1 மாணவருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாகி பல் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டில் -7, நிர்வாக ஒதுக்கீட்டில்-5 மாணவருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டில் -7, நிர்வாக ஒதுக்கீட்டில்-5 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.