/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டை வங்கி கொள்ளை முயற்சி; வடமாநில தொழிலாளியா என விசாரணை

ADDED : நவ 13, 2024 06:56 AM
புதுச்சேரி : முதலியார்பேட்டை வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது வடமாநில ஆசாமியா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டை ஏ.எப்.டி. மில் எதிரில் உள்ள இந்தியன் வங்கியில், கடந்த 9ம் இரவு கழிப்பறை வெண்டிலேட்டர் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர், லாக்கரை உடைக்க முயற்சித்துவிட்டு, அங்கிருந்த டேப்லெட் திருடிச் சென்றார். இவை அனைத்தும் சி.சி.டி.வி.,யில் பதிவாகி உள்ளது.
வங்கி மேலாளர் புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் கழிவறை வழியாக நுழைந்த மர்ம நபர் வடமாநில வாலிபர் போல் உள்ளதால், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பதிவான வடமாநில தொழிலாளர்கள் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு வருகின்றனர். மேலும், திருடப்பட்ட டேப்லெட் சார்ஜ் இல்லாததால் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.
இதனால் மர்ம நபர் இருக்கும் இடம் தெரியவில்லை.
டேப்லெட் ஆன் செய்த வுடன் இடத்தை கண்டறிந்து கைது செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.