/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
40 டன் தரமற்ற ரேஷன் அரிசி அகற்றம் முதலியார்பேட்டை தொகுதி மக்கள் நிம்மதி
/
40 டன் தரமற்ற ரேஷன் அரிசி அகற்றம் முதலியார்பேட்டை தொகுதி மக்கள் நிம்மதி
40 டன் தரமற்ற ரேஷன் அரிசி அகற்றம் முதலியார்பேட்டை தொகுதி மக்கள் நிம்மதி
40 டன் தரமற்ற ரேஷன் அரிசி அகற்றம் முதலியார்பேட்டை தொகுதி மக்கள் நிம்மதி
ADDED : அக் 26, 2025 03:13 AM

புதுச்சேரி: பல ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டு இருந்த தரமற்ற ரேஷன் அரிசி அகற்றப்பட்டது.
புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான உதவியாளர் பொறியாளர்-3 கட்டடம் மரப்பாலத்தில் உள்ளது. இங்கு 40 டன் தரமற்ற அரிசி கடந்த 2019ம் ஆண்டு பாப்ஸ்கோ சார்பில், இறக்கி வைக்கப்பட்டது.
ஆனால், அவற்றை அகற்றவில்லை. அந்த தரமற்ற அரிசியை அகற்ற புதுச்சேரி அரசு அண்மையில் ஒப்புதல் அளித்த நிலையில் ஒருவழியாக லாரியில் ஏற்றி அகற்றப்பட்டது.
என்ன காரணம் கடந்த 2019 ம் ஆண்டு ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி அந்த அரிசியை மக்களுக்கு விநியோகிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, தரமற்ற இலவச அரிசிகள் அங்காங்கே அரசு அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டன. இருப்பினும், அரிசி விநியோகித்த ஆலை நிறுவனம் வழக்கு போட்டதால் அந்த தரமற்ற அரிசி குறித்து, முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
வேறுவழியின்றி வழக்கு முடியும் வரை குடோனில் வைக்கப்பட்டது. இப்போது வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து தரமற்ற ரேஷன் அரிசி டெண்டர் விட்டு அகற்றப்பட்டுள்ளது.
நுாலகமா... ரேஷன் கடையா... தொகுதி எம்.எல்.ஏ., சம்பத், கூறுகையில், 'சட்டசபையில் பல முறை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். போராட்டமும் நடத்தப்பட்டது.
ஒருவழியாக நகராட்சி இடம் காலி செய்யப்பட்டுள்ளது. இங்கு நுாலகம் அல்லது ரேஷன் கடை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

