/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலீடு பணம் இரட்டிப்பாக்கி தருவதாக புதுச்சேரியில் பல கோடி ரூபாய் மோசடி
/
முதலீடு பணம் இரட்டிப்பாக்கி தருவதாக புதுச்சேரியில் பல கோடி ரூபாய் மோசடி
முதலீடு பணம் இரட்டிப்பாக்கி தருவதாக புதுச்சேரியில் பல கோடி ரூபாய் மோசடி
முதலீடு பணம் இரட்டிப்பாக்கி தருவதாக புதுச்சேரியில் பல கோடி ரூபாய் மோசடி
ADDED : ஆக 14, 2025 11:58 PM

புதுச்சேரி: 'ஸ்டார்லிங்க்' என்ற செயலியில் முதலீடு செய்தால் 30 நாளில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாயை சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்துள்ளது.
'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' அடிப்படையில், 'ஸ்டார் லிங்க்' என்ற செயலியில் முதலீடு செய்தால் 30 நாளில் இரட்டிப்பு பணம் தருவதாக, சமூக வலைதளத்தில் தகவல் வைரலானது.
மேலும், இந்த செயலியில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தவருக்கு தினமும் ரூ.400 வங்கி கணக்கில் வரவு வைத்த விபரங்களை பதிவிட்டு, மேலும், புதிய நபர்களை சேர்த்துவிட்டால் 8 சதவீதம் கமிஷன் தொகை தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நம்பி புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த பலர், மர்ம நபர்கள் அனுப்பிய 'லிங்க்'கில் இணைந்து கோடி கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
அவ்வாறு முதலீடு செய்தவர்களுக்கு 30 நாட்கள் முடிந்த நிலையில், இரட்டிப்பு பணம் தராமல், மர்ம நபர்கள் தங்கள் இணைப்பை துண்டித்ததுடன், முதலீடு செய்தவர்களின் மொபைலுக்கு அனுப்பிய செயலிகளையும் காணாமல் போக செய்துள்ளனர்.
அதன்பிறகே, போலி செயலியில் பணத்தை முதலீடு செய்து, ஏமாந்தது தெரியவந்தது. புதுச்சேரியில் இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட சிலர் அளித்த புகாரின் பேரில் 'சைபர் கிரைம்' போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைன் வர்த்தக முதலீடு தொடர்பாக மொபைல் செயலிகளில் யாரும் பணம் செலுத்த வேண்டாம் என பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும், புதிது, புதிதாக வரும் முதலீடு தொடர்பான செயலிகளில் பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாறுவது தொடர்கதையாக உள்ளது.
அதுபோல், தற்போது புதிதாக 'ஸ்டார்லிங்க்' என்ற செயலியில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என 100க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். புதுச்சேரியில், இதுவரை 10க்கும் மேற்பட்டோர், ரூ.10 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஆன்லைனில் வரும் எந்தவித முதலீடு தொடர்பான செயலிகளை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்'' என, கேட்டுக் கொண்டுள்ளனர்.