/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 13, 2025 03:35 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 33 மாதங்களுக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக ஊழியர்கள் போராட்டக்குழுவினர் நேற்று மிஷன் வீதி மாதா கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆலோசகர் ஆனந்த கணபதி தலைமை தாங்கினார்.
கன்வீனர்கள் வேளாங்கண்ணிதாசன், கலிய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், பொதுச் செயலாளர் முனுசாமி உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கதிரேசன் நன்றி கூறினார்.