UPDATED : அக் 15, 2026 08:41 PM
ADDED : அக் 15, 2026 08:37 PM
புதுச்சேரி: வர்த்தக உரிமம் பெற லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோயம்புத்துாரை தலைமையிடமாக கொண்ட அழகு சாதனை பொருள் விற்பனை நிறுவனம் புதுச்சேரியில் துவங்க உள்ள கிளைக்கு வர்த்தக உரிமம் கோரி புதுச்சேரி நகராட்சிக்கு விண்ணப்பித்திருந்தது.
அதற்காக நிறுவன மேலாளர் ரஞ்சித் கடந்த மார்ச் 3ம் தேதி விண்ணப்பித்தார். வர்த்தக உரிமம் பெறுவது குறித்து கடந்த மாதம் 7ம் தேதி ரஞ்சித் நகராட்சி அலுவலர் அலெக்சாண்டரை அணுகினார்.
அப்போது அலெக்சாண்டர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இந்த உரையாடலை ரஞ்சித் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் புதுச்சேரி, லஞசம் ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர். இந்நிலையில் அலெக்சாண்டர் முன்ஜாமின் கேட்டு புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
