ADDED : நவ 11, 2026 05:48 PM

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளி கல்வித் துறை சார்பில் வட்டம் 2, உழவர்கரை நகராட்சி அளவிலான தடகளப் போட்டிகள் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (நவ.,11) துவங்கியது.
போட்டிகளை முத்தியார்பாளையம், இளங்கோயடிகள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் மோகன், விளையாட்டு துறை துணை இயக்குநர் வைத்தியநாதன், கல்வித்துறையை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
விரிவுரையாளர் சக்திவேல் வரவேற்றார். போட்டியில் ஓட்டப்பந்தயம், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட ஒவ்வொரு போட்டியிலும் மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடரில் மொத்தம் 30 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இரண்டாவது நாளாக இன்றும் தடகள போட்டிகள் நடக்கிறது. அனைத்து ஏற்பாடுகளையும், புதுச்சேரி பள்ளி கல்வித் துறையும், முத்தியார்பாளையம் இளங்கோயடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியும் இணைந்து செய்துள்ளன.
