/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் நிலையம் திறப்பதாக 'வதந்தி' நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி
/
பஸ் நிலையம் திறப்பதாக 'வதந்தி' நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி
பஸ் நிலையம் திறப்பதாக 'வதந்தி' நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி
பஸ் நிலையம் திறப்பதாக 'வதந்தி' நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி
ADDED : மார் 16, 2025 07:32 AM

புதுச்சேரி; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் இருந்த பஸ் நிலையத்தை இடித்து விட்டு 34 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. கடை மற்றும் பஸ் நிறுத்தத்திற்கான பணிகள் முடிந்து பஸ் நிலையம் தயார் நிலையில் உள்ளது.
தற்போது கட்டியுள்ள கடைகள் ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு ஏலம் விடாமல் வழங்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நாளை 17ம் தேதி திங்கட்கிழமை பஸ் நிலையம் திறக்கப்படுவதாக சமூக வலை தளங்களில் வதந்தி வேகமாக பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் தங்களுக்கு தெரியாமல் பஸ் நிலையம் யார் திறக்கப் போகிறார்கள் என்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.
இது மட்டுமின்றி பஸ் நிலையத்திற்கு வாஜ்பாய் பெயரும் சூட்டப்படுவதாகவும் வதந்திகள் எழுந்தன. பஸ் நிலையம் திறப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தற்போது தான் புதுச்சேரி நகராட்சி துவங்கி உள்ளது. அனுமதி கிடைத்த பின்பே, பஸ் நிலையம் திறக்கும் தேதி தெரியவரும். அதற்குள் யாரோ கிளப்பிவிட்ட வதந்தியால் பரபரப்பு நிலவியது.