/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொலை வழக்கு குற்றவாளி 5 ஆண்டுகளுக்கு பின் கைது
/
கொலை வழக்கு குற்றவாளி 5 ஆண்டுகளுக்கு பின் கைது
ADDED : ஜூன் 14, 2025 11:32 PM

அரியாங்குப்பம் : கொலை வழக்கில் கோர்டில் ஆஜராகமல் 5 ஆண்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பத்தில் கடந்த 2019ம் ஆண்டு பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், அரியாங்குப்பம், மாஞ்சாலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், 29, என்பவர் இரண்டாவது குற்றவாளியாக, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பின், ஜாமினில் வெளியே வந்த அவர், கோர்ட்டில், ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து, அரியாங்குப்பம் போலீசார் அவரை தேடி வந்தனர். கடந்த 5 ஆண்டுகள் தமிழக பகுதியில் தலைமறைவாக இருந்தகிருஷ்ணன்,அரியாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அயைதடுத்து,சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.