ADDED : மே 21, 2026 06:42 AM

புதுச்சேரி: ஜிப்மர் செவிலியர் துறை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறை சார்பில், 'முஸ்கான் என்ற தலைப்பில், மாநில அளவிலான பயிற்சி முகாம் நடந்தது.
ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி, மருத்துவக் கண்காணிப்பாளர் சகா வினோத்குமார் ஆகியோர் வழிகாட்டுதலில் நடந்த பயிற்சி முகாமினை, மருத்துவக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கவுரி துரைராஜன் துவக்கி வைத்தார். செவிலியர் சேவை இயக்குநர் மற்றும் முஸ்கான் ஒருங்கிணைப்பாளர் செங்கமலர் செல்வி வரவேற்றார். செவிலியர் சேவைகள் பொறுப்பாளர் புஷ்பலதா துவக்கவுரையாற்றினார். பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறையின் உதவி பேராசிரியர்கள் உஷாதேவி, நிவேதிதா மொண்டல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சுகாதார தர மேலாண்மை நிபுணர் டாக்டர் ராகேஷ் கண்ணா, குழந்தை நட்பு மருத்துவ சேவைகள் மற்றும் பயனுள்ள தகவல் பரிமாற்றம் குறித்து பேசினார். தடயவியல் துறை பேராசிரியர் அம்பிகா பத்ரா, போக்சோ சட்ட வழி காட்டுதல்களுக்கு ஏற்ப குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக பராமரிப்பு குறித்து விளக்கமளித்தார். உதவி பேராசிரியர்கள் டாக்டர் சிவமுருகன், இ.டி.ஏ.டி., நடைமுறைகள் குறித்தும், டாக்டர் அனிதா யு.ஐ.பி., மற்றும் தடுப்பூசி மேலாண்மை குறித்தும் பேசினர். செவிலியர் கண்காணிப்பாளர் ஜேன்மேரி ஆண்ட்ரூ நன்றி கூறினார். ஜிப்மர் நிறுவனம் முஸ்கான் என்ற தேசிய சான்றிதழைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இப்பயிற்சி முகாம் அந்த சான்றிதழ் பெறும் செயல்முறைக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்தது.
