/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காளியம்மன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை
/
காளியம்மன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை
ADDED : மே 01, 2025 07:01 AM

கிள்ளை : சிதம்பரம் அருகே காளியம்மன், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த நஞ்சை மகத்துவாழ்க்கை கிராமத்தில், காளியம்மன், காமாட்சி அம்மன், சப்தகன்னிகள் கோவில் புதிதாக கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
அதையொட்டி, கடந்த 29ம் தேதி முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை நடந்தது.
தொடர்ந்து, கடம் புறப்பாடாகி காலை 10:25 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிள்ளை தைக்கால் சையத்ஷா ரஹமத்துல்லா தர்கா டிரஸ்டி சையத் சகாப் தலைமையில் இஸ்லாமியர்கள் அம்மனுக்கு பழங்கள், பட்டு உள்ளிட்ட சீர்வரிசையை ஊர்வலமாக எடுத்துவந்து கோவில் நிர்வாகத்திடம் வழங்கினர்.

