sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முத்தியால்பேட்டை போலீசார் கூண்டோடு இடமாற்றம்

முத்தியால்பேட்டை போலீசார் கூண்டோடு இடமாற்றம்

முத்தியால்பேட்டை போலீசார் கூண்டோடு இடமாற்றம்


ADDED : மார் 08, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 06:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் மெத்தனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. போலீசாரை கூண்டோடு இடமாற்றம் செய்ய முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கண்ணன், அரியாங்குப்பம் சப்இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் இருவரும் முத்தியால்பேட்டைக்கு மாற்றப்பட்டனர். லாஸ்பேட்டை குடியிருப்பு புறக்காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் கதிரேசன், அரியாங்குப்பத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது தவிர, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு விடுவிக்கப்படாமல் இருந்த 5 பேர் உடனடியாக அந்தந்த காவல் நிலையத்திற்கு செல்ல நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உதவி சப் இன்ஸ்பெக்டர், தலைமை காவலர் உட்பட 11 போலீஸ்காரர்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம்


சமீபத்தில் சீனியர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்ற சுவாதிசிங், குற்றம் மற்றும் நுண்ணறிவு பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவை கூடுதலாக கவனித்து வந்தார். சிறுமி கொலை வழக்கு மற்றும் போராட்டங்களை கவனித்தார். இந்நிலையில், சுவாதிசிங், ஐ.ஆர்.பி.என். கமான்டன்ட் மற்றும் போக்குவரத்து பிரிவும் ஒதுக்கப்பட்டது.

புதிதாக பொறுப்பேற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கலைவாணனுக்கு, குற்றம் மற்றும் நுண்ணறிவு பிரிவு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்துள்ள அஜித்குமார் சிங்லா, போலீஸ் ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவல்படை எஸ்.பி., ராஜசேகரவல்லட்டிற்கு, சிக்மா செக்யூரிட்டி கூடுதலாக வழங்கப்பட்டது. சிக்மா செக்யூரிட்டி எஸ்.பி., பாலச்சந்தர், பி.சி.ஆர்., செல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு காரைக்கால் வடக்கு பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us