/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஜூன் 08, 2025 10:27 PM

அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபி ேஷக விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
வில்லியனுார் சாலை ,முருங்கப்பாக்கம் நாட்டார் தெருவில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி முடிந்த நிலையில், கடந்த 5ம் தேதி, வேள்வி நிறைவு, பால கணபதி பூஜை நடந்தது. 6ம் தேதி தீபத்திருமகள் வழிபாடு, முதற் கால வேள்வி பூஜை நடந்தது.
நேற்று முன்திம் இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வி, சூரியபூஜை, ஞானத் திருமஞ்சனம் பூஜை, நவகன்னி நவசக்தி பூஜைகள் நடந்தது. நேற்று 8ம் தேதி, நான்காம் கால வேள்வி பூஜை, காலை 8:00 மணியளவில், முத்துமாரியம்மன் கோவிலில் விமானத்தில், புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. அம்மனுக்கு அபிேஷகம் செய்து, தீபாராதனை நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு தலைவர் வாழ்முனி, கோவில் நிர்வாக அதிகாரி அமுதன், பஞ்சாயத்து தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.பி., ராமதாஸ், முன்னாள் சபாநாயகர் சபாபதி மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.