தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வில்லியனுாரில் எனது வெற்றி உறுதி: என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் பேட்டி

வில்லியனுாரில் எனது வெற்றி உறுதி: என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் பேட்டி

வில்லியனுாரில் எனது வெற்றி உறுதி: என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் பேட்டி


ADDED : மார் 31, 2026 07:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 07:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்:வில்லியனுார் தொகுதி மாணவர்கள் உயர்கல்வி பயில வசதியாக சொந்த செலவில் இலவச கோச்சிங் சென்டர் அமைத்து தருவேன் என, என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், கூறியதாவது;

வில்லியனுார் தொகுதி மக்கள் மீது முதல்வர் ரங்கசாமி வைத்துள்ள நன்மதிப்பினால் தொகுதி முழுவதும் சாலைகள், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்ய சிறப்பு கவனம் செலுத்தி மாநில மற்றும் மத்திய ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதிகளை அதிக அளவில் ஒதுக்கி பணிகளை செய்து கொடுத்துள்ளார்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் கருதி இப்படி செய்த முதல்வரின் வேட்பாளராக நான் போட்டியிடுவதால், முதியோர்கள், இளைஞர்கள், அரசு வேலை பெற்றவர்கள் என அனைத்து தரப்பினரும் எனக்கு ஆதரவு கொடுப்பதால் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றதும், நவீன வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானம் அமைத்துகொடுப்பேன். தொகுதி மாணவர்களின் உயர்கல்வி படிக்க வசதியாக எனது சொந்த செலவில் இலவச கோச்சிங் சென்டர் அமைத்து கொடுப்பேன். போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்

புதுச்சேரிக்கு இணையாக வில்லியனுாரில் உள்ள அரசு சுகாதார நிலையத்தில் படுக்கை வசதியுடன் கூடிய அனைத்து சிகிச்சைகளுக்கும் ஒருங்கே முழு நேரமும் செயல்படும் வகையில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவேன்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் ஜி.என்.பாளையம் ஐய்யனார் கோவில் மற்றும் ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் முழுநேரமும் செயல்படும் புறக்காவல் நிலையம் அமைப்பேன்.

வில்லியனுாரில் சொந்த கட்டடத்தில் நவீன வசதிகள் கொண்ட நுாலகம் மற்றும் நவீன பஸ் நிலையம் அமைத்து கொடுப்பேன். எந்த நேரத்திலும் மக்கள் என்னை எளிதில் சந்திக்கலாம். முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சியின் சாதனைகளை தொடர்ந்திட எனக்கு 'ஜக்கு' சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us