மியாட் சிறப்பு மருத்துவர்கள் புதுச்சேரி, கடலுாரில் முகாம்
மியாட் சிறப்பு மருத்துவர்கள் புதுச்சேரி, கடலுாரில் முகாம்
ADDED : மார் 03, 2024 04:44 AM

புதுச்சேரி: சென்னை மியாட் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணர்கள், கடலுார் மற்றும் புதுச்சேரியில் ஆலோசனை வழங்கினர்.
சென்னை மியாட் மருத்துவமனையின் கதிர் வீச்சு புற்றுநோயியல் நிபுணர் அரவிந்த்குமார் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன் ஆகியோர் கடலுார், ஆற்காட் மருத்துவமனையில் நேற்று காலை 9:00 மணிக்கும், புதுச்சேரி, தி பாஷ் மருத்துவனையில் மாலை 5:00 மணிக்கும் ஆலோசனை வழங்கினர்.
இதில், தோலுக்கு அடியில் கட்டி, எடையில் மாற்றங்கள், தொடர் இருமல், சுவாச பிரச்னை, களைப்பு, நீண்ட காலமாக தசை அல்லது மூட்டு வலி, தொண்டை கட்டுதல், விவரிக்க முடியாத ரத்தப்போக்கு, பெண்களுக்கான மார்பகக் கட்டி, கர்பப்பை புற்றுநோய், அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்பாக, டாக்டர் அரவிந்த் குமார் ஆலோசனை வழங்கினார்.
அதேபோல, தலைவலி மற்றும் வாந்தி, வலிப்புநோய், கீழ் முதுகு வலி, ட்ரைஜீமினல் நியூரால்ஜியா, பக்கவாதம், கை, கால்கள் செயலிழுக்கும் பக்கவாதம், உடல் உறுப்புகளில் பலவீனம், மறதிநோய், முடக்குவாதம், உடல் நடுக்கம், அசாதாரண இயக்கங்கள், முகம், கழுத்து மற்றும் முதுகு நரம்பு கோளாறுகள் உள்ளிட்ட மூளை மற்றும் முதுகு தண்டுவட நரம்பு கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, டாக்டர் நடராஜன் ஆலோசனை வழங்கினார்.
