/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாயமான நிழற்குடை: மூலக்குளத்தில் 'தினமலர்' செய்தியுடன் மெகா பேனர் எம்.எல்.ஏ.,வுக்கு சமூக சேவகர் சரமாரி கேள்வி
/
மாயமான நிழற்குடை: மூலக்குளத்தில் 'தினமலர்' செய்தியுடன் மெகா பேனர் எம்.எல்.ஏ.,வுக்கு சமூக சேவகர் சரமாரி கேள்வி
மாயமான நிழற்குடை: மூலக்குளத்தில் 'தினமலர்' செய்தியுடன் மெகா பேனர் எம்.எல்.ஏ.,வுக்கு சமூக சேவகர் சரமாரி கேள்வி
மாயமான நிழற்குடை: மூலக்குளத்தில் 'தினமலர்' செய்தியுடன் மெகா பேனர் எம்.எல்.ஏ.,வுக்கு சமூக சேவகர் சரமாரி கேள்வி
ADDED : ஜன 09, 2024 07:19 AM

புதுச்சேரி : மூலக்குளத்தில் நிழற்குடை மாயமான விவகாரத்தில், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ., சிவசங்கர் என்ன பதில் சொல்ல போகிறார் என கேள்வி எழுப்பி, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியுடன், பொதுமக்களின் பார்வைக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில், மூலக்குளம் ஜெ. ஜெ. நகர் ஆர்ச் அருகே, பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், சமீபத்தில் நிழற்குடை மர்மமான முறையில் காணாமல் போனது.
நிழற்குடை இல்லாததால், பயணிகள் பரிதவிப்பது குறித்தும், சாலையிலேயே நின்று பஸ் ஏறுவதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது குறித்தும், 'தினமலர்' நாளிதழில் கடந்த 5ம் தேதி புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை, உழவர்கரையை சேர்ந்த சமூகசேவகரான வக்கீல் சசிபாலன், பொதுமக்களின் பார்வைக்கு, நிழற்குடை இருந்த அதே இடத்தில் பேனராக வைத்துள்ளார். நிழற்குடை மாயமான விவகாரத்தில், தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கரின் பதில் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, வக்கீல் சசிபாலன் கூறியதாவது:
மூலக்குளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல், பயணிகள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடும் வெயில் மற்றும் மழையில் இருந்து தப்பிக்க, அருகில் உள்ள கடைகளை தேடி அடைக்கலம் அடைகின்றனர். மழையில் நனைந்தபடி பஸ் ஏறுகின்றனர்.
பல மாதங்கள் கடந்தபோதும், மாயமான நிழற்குடையை மீண்டும் வைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இது, மர்மாகவே உள்ளது. இதுதொடர்பாக, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கோட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிழற்குடை அமைக்கப்படவில்லை.
வாய்க்காலை அகலப்படுத்திய பிறகு நிழற்குடை வைப்பதாக சாக்குபோக்கு சொல்லுகின்றனர். அது, எப்போது நடக்கும் என்றும் தெரியவில்லை. அதுவரை நிழற்குடை இல்லாமல் பயணிகள், பொதுமக்கள் என்ன செய்வது?
மர்மமான முறையில் காணாமல்போன நிழற்குடை விவகாரத்தை, 'தினமலர்' நாளிதழ் சமூக அக்கறையுடன் படத்துடன் செய்தியாக வெளியிட்டுள்ளது. 'தினமலர் செய்தியை, பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் பார்வைக்கு வைத்துள்ளேன்.
நிழற்குடை அமைக்க கோடிக்கணக்கில் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாய் இருந்தால்கூட நிழற்குடை அமைத்து விடலாம்.
அரசிடம் பணம் இல்லையென்றால், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எம்.எல்.ஏ.,வால் அமைத்து கொடுக்க முடியும். அல்லது அவர் சார்ந்திருக்கின்ற பா.ஜ., எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துகூட நிதி ஒதுக்கி நிழற்குடை கட்டித் தரலாம்.
இல்லையென்றால், உழவர்கரை தொகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களை அணுகி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிழற்குடை அமைக்க செய்யலாம். ஆனால், எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அரசு அனுமதி அளித்தால், நானே அந்த இடத்தில் நிழற்குடையை சொந்த செலவில் அமைத்து தருகிறேன்' என்றார்.