/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்
/
என்.ஆர்.காங்., ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்
ADDED : அக் 11, 2024 05:53 AM

பாகூர்: எதிர்கட்சி எம்.எல்.ஏ.,வுடன், முதல்வர் கைகோர்த்து செல்கிறார். சொந்த கட்சி காரர்களை, மதிப்பது கிடையாது என, பாகூர் தொகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள் தங்களது மனக்குமுறளை வெளிப்படுத்தி உள்ளனர்.
புதுச்சேரி என்.ஆர்.காங்., தலைமை அலுவலகத்தில், பாகூர் தொகுதிக்கு நிர்வாகிகள் நியமணம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், என்.ஆர்.காங்., மாநில செயலாளர் ஜெயபால், அமைச்சர் தேனி ஜெயக்குமார், எம்.எல்.ஏ., கே.எஸ்.பி. ரமேஷ், முன்னாள் அமைச்சர் தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாகூர் தொகுதியை சேர்ந்த பிரமுகர்கள், '' எதற்காக எங்களை நிர்வாகிகளாக நியமனம் செய்ய உள்ளீர்கள். கட்சிகாரர்களை பார்ப்பது கிடையாது. மதிப்பதும் கிடையாது. கோவில் கமிட்டி, அதிகாரிகள் நியமணத்தில் கூட நமக்கு எந்த வாய்ப்புகளும் அளிப்பது கிடையாது.
எதிர்கட்சி எம்.எல்.ஏ.,வுடன், முதல்வர் கைகோர்த்து செல்கிறார். சொந்த கட்சி காரர்களை, முதல்வர், மதிப்பது கிடையாது. முதல்வர் நினைத்திருந்தால், கடந்த சட்டபை தேர்தலில், பாகூர் தொகுதியில் தனவேலு வெற்றி பெற்று இருப்பார். லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஏன் ஆலோசிக்கவில்லை. இப்படி இருந்தால் நமது கட்சி எப்படி வளரும்.
எதிர்கட்சி தொகுதியில், பணிகளை மேற்கொள்ள, அமைச்சர்களை பொறுப்பாளாக நியமிக்க வேண்டும் என பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

