/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 07, 2025 02:17 AM

அரியாங்குப்பம் : நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
கடலுார் சாலை, நைனார்மண்டபத்தில், நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் திருப்பணி பணிகள் முடிந்து கடந்த 4ம் தேதி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், முதற்கால ஹோமம் மற்றும் வேதமந்திரம் ஓதப்பட்டது.
நேற்று முன்தினம் 5ம் தேதி, இண்டாம் கால பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் கால பூஜை, மூல மந்திர ஹோமங்கள் நடந்தது. நேற்று நான்காம் கால பூஜை, அஸ்திர ஹோமம், யாத்ராதாணம் கடம் புறப்பாடு, காலை 8:15 மணியளவில், நாகமுத்து மாரியம்மன் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
சம்பத் எம்.எல்.ஏ., உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை அம்மனுக்கு மகா அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கடலுார் செல்லும் பஸ் போன்ற கனரக வானங்களை 8:00 மணி முதல் 10:00 மணி வரை மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.