ADDED : பிப் 22, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் 2ம் ஆண்டு விழா நடக்கிறது.
லாஸ்பேட்டை, சங்கரதாஸ் சுவாமிகள் நகர் 3வது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோவில் 2ம் ஆண்டு விழா மற்றும் ஆலய மகாமண்டபம் அமைக்கும் பணி இன்று நடக்கிறது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு கணபதி ஹோமம், 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக ஆராதனை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.
