/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனலட்சுமி சீனுவாசன் பல்கலையில் நட்சத்திர கலைவிழா
/
தனலட்சுமி சீனுவாசன் பல்கலையில் நட்சத்திர கலைவிழா
ADDED : மார் 01, 2024 11:28 AM

புதுச்சேரி : பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நட்சத்திர கலை விழா நேற்று துவங்கியது.
விழாவிற்கு, பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இணைவேந்தர் அனந்தலட்சுமி, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மகளிர் கல்லுாரி முதல்வர் உமாதேவி பொங்கியா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.
செயலாளர் நீல்ராஜ், இயக்குனர்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.
தனலட்சுமி சீனிவாசன் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், கலைத்துறையில் சிறந்து விளங்கும் பரதநாட்டிய கலைஞர் மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர், பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜிக்கு இன்ஸபிரேஷன் ஐகான் விருது, ஆச்சி குழும தலைவர் பத்மசிங்கிற்கு சேஞ்ச்மேக்கர் விருது, டாக்டர்கள் ஆசிக் நிமத்துல்லா, கணேஷ், ராஜேஷ், பிள்ளை ஆர்த்தி கருணாநிதி ஆகியோருக்கு சமூக நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான விருது வழங்கப் பட்டது.
சிறப்பு அழைப்பளர்களான நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை ப்ரியா பவானிசங்கர், மாணவர்களுடன் கலந்துரையாடினர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.
ரோவர் கல்விக் குழும தலைவர் வரதராஜன், ராமகிருஷ்ணா கல்விக் குழும தலைவர் சிவசுப்ரமணியம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று இரண்டாம் நாள் விழாவில் பிரபல பாடகர்கள் ஸ்வேதா மோகன், ஸ்ரீநிஷா, பிரியா ஜெர்சன் மற்றும் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

