/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நல்லுார் அரசு பள்ளிக்கு ரூ.24.25 லட்சத்தில் சுற்றுச் சுவர்
/
நல்லுார் அரசு பள்ளிக்கு ரூ.24.25 லட்சத்தில் சுற்றுச் சுவர்
நல்லுார் அரசு பள்ளிக்கு ரூ.24.25 லட்சத்தில் சுற்றுச் சுவர்
நல்லுார் அரசு பள்ளிக்கு ரூ.24.25 லட்சத்தில் சுற்றுச் சுவர்
ADDED : நவ 24, 2025 05:50 AM

திருபுவனை: நல்லுார் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ. 24.25 லட்சம் செலவில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் சிறப்புக் கூறு நிதியின் கீழ், திருபுவனை தொகுதி, நல்லுார் அரசு தொடக்கப் பள்ளிக்கு பொதுப்பணித் துறையின் சார்பில், ரூ. 24.25 லட்சம் செலவில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, சிறப்பு கட்டடம் 2வது கோட்ட செயற்பொறியாளர் பக்தவச்சலம், கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன், இளநிலை பொறியாளர் மணிமாறன், ஐந்தாம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியை ரேவதி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஜே.சி.எம்., மக்கள் மன்ற தொகுதி தலைவர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் வடிவேல், துணைத் தலைவர் அருள்மணி, மகளிர் அணி கஸ்துாரி, சாந்தி, அம்மு உள்பட பலர் பங்கேற்றனர்.

