தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 5 ஆண்டுகளில் செயல்வடிவம் பெற்ற வளர்ச்சி பணிகள் சாதனைகளை கூறி நமச்சிவாயம் ஓட்டு சேகரிப்பு

 5 ஆண்டுகளில் செயல்வடிவம் பெற்ற வளர்ச்சி பணிகள் சாதனைகளை கூறி நமச்சிவாயம் ஓட்டு சேகரிப்பு

 5 ஆண்டுகளில் செயல்வடிவம் பெற்ற வளர்ச்சி பணிகள் சாதனைகளை கூறி நமச்சிவாயம் ஓட்டு சேகரிப்பு


ADDED : மார் 28, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் கூனிச்சம்பட்டில் கடந்த 5 ஆண்டு வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணியில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் 2வது முறையாக பா.ஜ., வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகிறார்.

கூனிச்சம்பட்டு ஐயனாரப்பன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, வீடு, வீடாக சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்து கூறி 'தாமரை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பா.ஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் பொதுமக்களிடம் பேசுகையில், 'கூனிச்சம்பட்டு கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 கோடி மதிப்பில் சாலை, கழிவுநீர் வாய்க்கால், தடையில்லா மின்சாரத்திற்கு புதிதாக டிரான்ஸ்பார்மர்கள், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தனது சொந்த நிதியில் திரவுபதியம்மன் கோவிலுக்கான தேர் சக்கரம், ெஷட் அமைக்கவும், ஆஞ்சநேயர் கோவில் திருப்பணிக்கு பல லட்சம் ரூபாய் வழங்கியுள்ளேன். தேர் வீதி உலா நடக்கும் மாட வீதிகளில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இது போன்று கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ள முடியாத பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சியில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் தாமரை சின்னத்தில் ஓட்டளித்து தன்னை மீண்டும் வெற்றி பெற செய்தால், கிடப்பில் உள்ள அனைத்து மக்கள் நல திட்டங்களையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என, ஓட்டு சேகரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us