கொடாத்துார் மணவெளியில் நமச்சிவாயம் ஓட்டு சேகரிப்பு
கொடாத்துார் மணவெளியில் நமச்சிவாயம் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 30, 2026 06:52 PM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் கொடாத்துார் மணவெளியில் நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் நேற்று கொடாத்துார், மணவெளி கிராமத்தில் உள்ள ஐயனார் கோவிலில் பூஜை செய்து, வீடு, வீடாக சென்று 'தாமரை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் கூறுகையில் கொடாத்துார், மணவெளி பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 3 கோடிக்கு மேல் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள், கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி உள்ளேன். தனது சொந்த நிதியின் கீழ் கொடாத்துார் செங்கழுநீர் அம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ. 2.50 லட்சம், சக்தி மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ. 2 லட்சம் வழங்கியுளேன்.
இதேபோன்று கடந்த காங்., ஆட்சியில் செய்ய முடியாத பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பா.ஜ., -என்.ஆர்.காங்., கூட்டணி அரசு மூலம் செய்து முடித்துள்ளேன். தேர்தலில் தன்னை மீண்டும் வெற்றி பெற செய்தால், கிராமத்தில் கிடப்பில் உள்ள அனைத்து மக்கள் நல திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இதில், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
