மண்ணாடிப்பட்டு தொகுதியில் நமச்சிவாயம் ஓட்டு சேகரிப்பு
மண்ணாடிப்பட்டு தொகுதியில் நமச்சிவாயம் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 25, 2026 07:48 AM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., சார்பில், அமைச்சர் நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதிலிருந்து மண்ணாடிப்பட்டு தொகுதியில் நி றைய திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கி இருந்தார். தற்போது மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
இதையடுத்து தொகுதியில் ஒவ்வொறு பகுதியில் செயல்படுத்திய திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை தொகுதி மக்களிடம் தெரிவித்து ஓட்டு சேகரித்து வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மண்ணாடிப்பட்டு தொகுதி மணலிப்பட்டு பகுதியில் உள்ள செங்கேணி அம்மன் கோவிலில் சாமி தரிசம் செய்து அங்கிருந்து வீடு வீடாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன் மற்றும் பா.ஜ., - என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
