ADDED : ஏப் 03, 2026 10:59 PM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பி.எஸ்.பாளையத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகளை கூறி ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'இந்த கிராமத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க ரூ. 15 லட்சத்தில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 5 கோடிக்கு மேல் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குரு சித்தானந்தா நகர், குமரன் நகர் உட்புற சாலைகள் கருங்கல் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தோப்பு தெரு மற்றும் ஏரிக்கரை சாலை மேம்படுத்தி மின் விளக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.பாளையம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்காக ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கிடப்பில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்தவும், நலத்திட்ட பணிகளை உடனுக்கு உடன் கொணடு வர தன்னை தாமரை சின்னத்தில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
