தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/செய்த பணிகளை விளக்கி கூறி நமச்சிவாயம் ஓட்டு வேட்டை

செய்த பணிகளை விளக்கி கூறி நமச்சிவாயம் ஓட்டு வேட்டை

செய்த பணிகளை விளக்கி கூறி நமச்சிவாயம் ஓட்டு வேட்டை


ADDED : மார் 31, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 07:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் தே.ஜ., கூட்டணி சார்பில், போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் நேற்று வாதானுாரில் வீடு, வீடாக சென்று கடந்த 5 ஆண்டுகளாக கிராமத்தில் செய்த மக்கள் நலப்பணிகளை கூறி 'தாமரை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர், வாதானுார் கிராமத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் ஏரிக்கரை சாலை, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட கிராம சாலைகள், சிமென்ட் சாலைகளாக மாற்றிப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் பெற்று தந்துள்ளேன்.

வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் வாதானுார் பேட் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகளுக்கு நிதி கொடுத்து கும்பாபிேஷகம் செய்துள்ளேன். மேலும், கிராமத்தில் கிடப்பில் உள்ள அடிப்படை வசதிகளை விரைந்து மேம்படுத்த தன்னை மீண்டும் வெற்றி பெற செய்தால் துரிதமாக நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி ஓட்டுகள் சேகரித்தார்.

பிரசாரத்தின்போது, தே.ஜ., கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us