ADDED : டிச 31, 2025 04:59 AM

திருபுவனை: புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 12ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பு, புதுச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் ரவி தலைமை தாங்கி, நம்வாழ்வாரின் உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
பொருளாளர் ஜெயராமன், துணைத் தலைவர் பாஸ்கர், துணைச் செயலாளர் ஆதிமூலம், செயலாளர்கள் முத்துராமன், விஜயன், லட்சுமணன், திருமால், பாலு, கார்த்திக், குமார், கந்தவேல், புதுச்சேரி இயற்கை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுப்ரமணி, செயலாளர் தங்கவேலு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களுக்கு இயற்கை மூலிகை டீ, நாட்டு வெல்லம் கலந்த கார் அரிசி அவல், அரி நெல்லிக்காய் வழங்கப்பட்டது.

