/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நந்தா ஜெய ஸ்ரீதரன் இல்ல திருமண விழா
/
நந்தா ஜெய ஸ்ரீதரன் இல்ல திருமண விழா
ADDED : பிப் 17, 2024 11:21 PM

புதுச்சேரி: என்.ஆர். காங்., கட்சி யின் சிறப்பு அழைப்பாளர் நந்தா ஜெய ஸ்ரீதரன் இல்லத் திருமண விழா நடந்தது. மணமக்களை முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்தினர்.
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளரும், லாஸ்பேட்டை பிரமுகருமான நந்தா ஜெய ஸ்ரீதரன் இல்லத் திருமண விழா, புதுச்சேரி அடுத்த பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்கள் டாக்டர் விசாலினி - டாக்டர் அக் ஷயகுமாரை வாழ்த்தினார்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், ஆகியோரும் நேரில் வாழ்த்தினர்.
துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, நேரு, பாஸ்கரன், ஜான்குமார், லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமார், ரமேஷ், ரிச்சர்ட் , சம்பத், செந்தில்குமார், சிவசங்கர், திருமுருகன், அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், சந்திரபிரியங்கா வாழ்த்தினர்.
என்.ஆர். காங்., நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை என். ஆர்.காங்., சிறப்பு அழைப்பாளர் நந்தா ஜெய ஸ்ரீதரன், நந்தா பூவராகவன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்று, நன்றி கூறினர்.