/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'குப்பை அள்ளும் பிரச்னையில் மிரட்டல் விடுத்தால் போதாது' நடவடிக்கை எடுக்க நாராயணசாமி வலியுறுத்தல்
/
'குப்பை அள்ளும் பிரச்னையில் மிரட்டல் விடுத்தால் போதாது' நடவடிக்கை எடுக்க நாராயணசாமி வலியுறுத்தல்
'குப்பை அள்ளும் பிரச்னையில் மிரட்டல் விடுத்தால் போதாது' நடவடிக்கை எடுக்க நாராயணசாமி வலியுறுத்தல்
'குப்பை அள்ளும் பிரச்னையில் மிரட்டல் விடுத்தால் போதாது' நடவடிக்கை எடுக்க நாராயணசாமி வலியுறுத்தல்
ADDED : அக் 04, 2025 07:11 AM
புதுச்சேரி : குப்பை அள்ளும் பிரச்னையில் முதல்வர் மிரட்டல் விடுத்தால் மட்டும் போதாது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர், கூறியதாவது:
கேரள மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் மகாதேவ், ராகுல் மார்பில் குண்டு அடிப்பட்டு உயிரிழப்பார் என, பகிரங்கமாக பேசி உள்ளார். ஆகையால், ராகுலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மகாதேவ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், காங்., சார்பில் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தப்படும்.
புதுச்சேரியில் கல்லுாரி மாணவர்களுக்கு சென்டாக் பணம் 3 ஆண்டுகளாக கொடுக்கவில்லை. அதனை சேர்த்து வழங்கப்படும் என்றனர். ஆனால், கடந்த 3 மாதமாக அரிசி போடாததற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.
குப்பை அள்ளும் டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாக கூறியிருந்தேன். இந்த முறை சென்னையை சேர்ந்த நிறுவனத்திற்கு 19 ஆண்டுகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. துாய்மை இந்தியா திட்ட அரசு விழாவில், குப்பை அள்ளும் நிறுவனம் குப்பைகளை சரியாக அள்ளவில்லை என்றால் டெண்டர் ரத்து செய்யப்படும் என, முதல்வர் கூறியது வரவேற்கதக்கது. மிரட்டல் விடுத்தால் மட்டும் போதாது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இம்மாத இறுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை டில்லி சென்று சந்திக்க உள்ளேன். அதில், புதுச்சேரியில் காங்., ஆட்சியின் போது ஒப்புதல் அளித்த சிவாஜி சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை மேம்பாலம் அமைக்க வலியுறுத்துவேன்.
வேலை வாய்ப்பில் 'சி' குரூப் பணியிடங்களுக்கு வயது தளர்வு கொடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைக்கின்றனர். வயது தளர்வு செய்ய கவர்னருக்கு முழு அதிகாரம் உண்டு. ஆனால் கவர்னர் இளைஞர்களை சந்திக்க நேரம் கொடுப்பதில்லை. இதனால் இளைஞர்கள் பாதிக்கின்றனர்' என்றார்.