/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் காங்., ஆட்சி அமைக்கும் நாராயணசாமி பரபரப்பு பேச்சு
/
புதுச்சேரியில் காங்., ஆட்சி அமைக்கும் நாராயணசாமி பரபரப்பு பேச்சு
புதுச்சேரியில் காங்., ஆட்சி அமைக்கும் நாராயணசாமி பரபரப்பு பேச்சு
புதுச்சேரியில் காங்., ஆட்சி அமைக்கும் நாராயணசாமி பரபரப்பு பேச்சு
ADDED : நவ 01, 2025 02:11 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், காங்., தலைமையில் இண்டி கூட்டணி ஆட்சி அமையும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
காங்., தலைமை அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் இந்திராவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தொடர்ந்து, சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, இருவரின் உருவப்படத்திற்கும் மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் இண்டி கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது;
நடைபெறவுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்காக இப்பணி நடக்கிறது. கம்ப்யூட்டர் சென்டரில் இருந்து கொண்டு வாக்காளர்களை நீக்குகின்றனர். ஒரு பெயர் நீக்க ரூ. 80 கமிஷன் பெறுகின்றனர். இச்செயலை, தேர்தல் துறையும், பா.ஜ.,வும் சேர்ந்து செய்கிறது.
ஓட்டு திருட்டு மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர். அதனால், நாம் விழிப்புடனும், முனைப்புடனும் இருக்க வேண்டும்.
புதுச்சேரியில், பா.ஜ.,வின் 'பி' டீமாக மார்ட்டின் செயல்படுகிறார். இவர், எதிர்க்கட்சி மற்றும் என்.ஆர்.காங்., தொகுதிகளில் தேர்தல் பணி செய்கிறார். மார்ட்டின் முதல்வர் கனவு காண்கிறார். அது பலிக்காது. புதுச்சேரியில், எத்தனை அணிகள் வந்தாலும், காங்., தலைமையில் இண்டி கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.
கூட்டத்தில், தி.மு.க., அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூ., சலீம், மா.கம்யூ., ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

