தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேசிய பூப்பந்து போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை

தேசிய பூப்பந்து போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை

தேசிய பூப்பந்து போட்டி புதுச்சேரி மாணவர்கள் சாதனை


UPDATED : நவ 04, 2026 09:29 PM

ADDED : நவ 04, 2026 09:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 09:29 PM ADDED : நவ 04, 2026 09:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சப்-ஜூனியர் தேசிய பூப்பந்து போட்டியில் புதுச்சேரி சாய்ராம் வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.

சத்தீஸ்கரில் நடந்த 45வது சப்-ஜூனியர் தேசிய பூப்பந்து போட்டியில் புதுச்சேரி சாய்ராம் வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் பள்ளியின் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு விளையாடி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றனர். ஆண்கள் பிரிவினர் மூன்றாம் இடம் பிடித்தனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் சாய் பிரகாஷ் லியோ முத்து, பள்ளி முதல்வர் சுதா ஆகியோர் வாழ்த்தினர்.

சாதனை படைத்த மாணவர்கள் பள்ளி முதல்வருடன் சென்று, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜசேகரன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us