தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு


UPDATED : நவ 17, 2026 06:27 PM

ADDED : நவ 17, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 06:27 PM ADDED : நவ 17, 2026 06:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் மாநில பயிற்சி மையம், பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில், 32வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு நடந்தது.

துவக்க விழாவிற்கு புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் வரவேற்றார். மாநில பயிற்சி மைய விரிவுரையாளர் சிவசங்கரி துவக்கவுரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் சேகர் வாழ்த்தி பேசினார். காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வேஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

இதில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாகே பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் 30 அறிவியல் ஆய்வு திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. மாணவர்களின் திட்டங்கள், மதிப்பீட்டாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.

நிறைவு விழாவில், காரைக்கால் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி வரவேற்றார். புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் தலைவர் பிரசாந்த் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் சிறப்புரை ஆற்றினார். அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் ஹேமாவதி வாழ்த்தி பேசினார்.

மாநில பயிற்சி மைய சிறப்பு திட்ட அலுவலர் கவுரி நிறைவுரை ஆற்றினார்.

புதுச்சேரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்தராஜா நன்றி கூறினார். ஏற்பாடுகளை அறிவியல் இயக்கத்தின் பொருளாளர் ரமேஷ் செய்திருந்தனர்.

மாநாட்டில், தேசிய அளவிலான போட்டிக்கு 6 ஆய்வு திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us