/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் தேசிய இணைய பாதுகாப்பு உச்சிமாநாடு
/
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் தேசிய இணைய பாதுகாப்பு உச்சிமாநாடு
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் தேசிய இணைய பாதுகாப்பு உச்சிமாநாடு
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் தேசிய இணைய பாதுகாப்பு உச்சிமாநாடு
ADDED : மார் 04, 2024 06:01 AM

புதுச்சேரி : மதகடிப்பட்டு,மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கான 2 நாள் தேசிய இணைய பாதுகாப்பு உச்சிமாநாடு - கிளவுட் பாதுகாப்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் நடந்தது.
தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில் தலைவர், முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம்,சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு,டில்லி தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் காளிராஜ்,பல்கலைக்கழக மானியக்குழு துணை செயலாளர் திக்க்ஷா ராஜ்புத்,புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
தக்-ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் தனசேகரன்,மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் துணை தலைவர் சுகுமாறன்,செயலாளர் நாராயணசாமி கேசவன்,பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தனர்.
தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் டீன் வேல்முருகன், டீன்கள் அன்புமலர்,அறிவழகர், கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம், அனைத்துத்துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
நிறைவு விழாவில் உள் துறை அமைச்சக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் உதவி போலீஸ் கமிஷனர் ஜிதேந்தர் சிங், தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில் தொழில்நுட்ப தலைவர் சத்தியசீலன் சண்முகம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
துவக்க விழாவில் தகவல் தொழில்நுட்ப துறையின் தலைவர் ராஜு , கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவர் பிரேம்குமார் நன்றி கூறினர்.

