/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய கண் தான இருவார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய கண் தான இருவார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : செப் 10, 2025 08:20 AM

புதுச்சேரி : தேசிய கண் தான இருவார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரைட், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி விஷன் மற்றும் புதுச்சேரி ரோட்டரி சங்கங்கள், ஜோதி கண் வங்கி, ஜிப்மர் கண் வங்கி, அரவிந்த கண் வங்கி மற்றும் பிம்ஸ் கண் வங்கிகள் மற்றும் பாண்டிச்சேரி கண் மருத்துவ நலச்சங்கம், இந்திய மருத்துவ கழகம் மற்றும் மகளிர் பிரிவும், நாட்டு நலப்பணி திட்ட ஒருகிணைப்பாளர்கள், அறுபடை வீடு மருத்துவ கல்லுாரி சார்பில், ஊர்வலம் நடந்தது.
ராஜா தியேட்டர், காமராஜர் சிலை அருகே துவங்கிய ஊர்வலத்திற்கு ஜோதி கண் வங்கி செயலாளர் டாக்டர் வனஜா வைத்தியநாதன் தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
ஊர்வலத்தில், ரோட்டரி மாவட்ட ஆளுநர் லியோன், ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் மணி, அலர்ட் தலைவர் மணநாதன், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரைட் தலைவர் அணுப், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி விஷன் தலைவர் ரேஸ்மி, மண்டலம் துணை ஆளுநர்கள் கந்தன், டோமினிக், அருண் தீபாஞ்சன், முருகவேல், தினேஷ் குமார், வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில், ஜோதி கண் பராமரிப்பு மருத்துவர்கள், ஊழியர்கள், நாட்டு நலப்பணி திட்ட ஒருகிணைப்பாளர்கள், அலுவலர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரைட், விஷன் மற்றும் அனைத்து புதுச்சேரி சங்க உறுப்பினர்கள், இந்திய மருத்துவ கழகம் மற்றும் மகளிர் மருத்துவ கிளை உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு கண்தான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை சாலை காந்தி மண்டபத்தை அடைத்தது.