/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய மீன்வள டிஜிட்டல் சான்றிதழ் வழங்கல்
/
தேசிய மீன்வள டிஜிட்டல் சான்றிதழ் வழங்கல்
ADDED : பிப் 18, 2025 06:24 AM
அரியாங்குப்பம்: தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் (என்.எப்.டி.பி) தற்காலிக சான்றிழை, பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வழங்கினார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில், மீன் சார், தொழில் சம்பந்தப்பட்ட தனி நபர்மற்றும் தொழில் நிறுவனங்களின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இணையதளம் மூலம், மீனவர்கள், மீன் வியாபாரிகள், மீன் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் அங்கு வேலை செய்பவர்கள், மீன் சார் தொழிலில் உள்ளவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்த பின்னர், தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சேகரிக்கப்பட்ட விபரங்களை, மீன் வளத்துறை அதிகாரிகளால் சரிபார்த்த பின், பதிவு சான்றிதழாக வழங்கப்படுகிறது.
இதன் மூலம், ஊக்க தொகை, அரசு உதவிகளை பெறுதல், வங்கி கடன், மீன்பிடி லைசன்ஸ் அனுமதி, சிறு தொழில் ஆதரவு உள்ளிட்டவை பயனாளிகள் பயன்பெறுவர்.
இது தொடர்பாக, அரியாங்குப்பம் தொகுதியில், நடந்த சிறப்பு முகாமில், பாஸ்கர் எம்.எல்.ஏ., தற்காலிக சான்றிதழை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர் (இயந்திர பிரிவு) ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.