/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து வலியுறுத்தி ஆற்றின் நடுவே தேசிய கொடி
/
மாநில அந்தஸ்து வலியுறுத்தி ஆற்றின் நடுவே தேசிய கொடி
மாநில அந்தஸ்து வலியுறுத்தி ஆற்றின் நடுவே தேசிய கொடி
மாநில அந்தஸ்து வலியுறுத்தி ஆற்றின் நடுவே தேசிய கொடி
ADDED : ஜன 27, 2025 04:32 AM

அரியாங்குப்பம், : மாநில அந்தஸ்து வலியுத்தி, துணியில் இயற்கையான முறையில், வர்ணம் பூசி, ஆற்றின் நடுவே தேசிய கொடி ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் பிரவீனா. குடியரசு தின விழாயொட்டி, தேசிய கொடியை துணியில் தயாரித்து, ஆரஞ்சு நிறத்திற்கு கேரட் ஜூஸ், அதனுடன் கேசரி பவுடர், பச்சை நிறத்திற்கு முருங்கை கீரை ஜூஸ் பயன்படுத்தி, தனது கை ரேகையால், 108 தடவைஅச்சிட்டு, பழச்சாறு மூலம் அசோக சக்கரம் வரைந்து கொடியை உருவாக்கினார். புதுச்சேரி புகழை பற்றி, 20 பாடல் வரிகளை கொடி கம்பத்தில் எழுதினார். நேற்று வீராம்பட்டினம் ஆற்றின் நடுவே, கொடி கம்பத்தை நட்டு, தேசிய கொடியை ஏற்றி, கொண்டாடினார்.