/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தவளக்குப்பத்தில் தேசிய கொடி பேரணி
/
தவளக்குப்பத்தில் தேசிய கொடி பேரணி
ADDED : மே 23, 2025 06:45 AM

அரியாங்குப்பம் : இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்துார்' வெற்றியை போற்றும் வகையில், மணவௌி தொகுதி பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஏந்தி வெற்றி பேரணி நடந்தது. ஆயிரக்கணக்கானோர் வெற்றி முழக்கமிட்டு பங்கேற்றனர்.
ஆபரேஷன் சிந்துாரில் ஈடுபட்ட நமது ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து, தவளக்குப்பம் சந்திப்பில் தேசிய கொடி பேரணி நேற்று மாலை துவங்கியது. சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்த பேரணியில், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், அசோக்பாபு, ராமலிங்கம் பங்கேற்றனர். திரளான பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் தேசிய கொடி ஏந்தி பேரணியாக சென்றனர். தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் இருந்து புறப்பட்ட பேரணி, நோணாங்குப்பம் படகு குழாம் திருவள்ளுவர் சிலை அருகே நிறைவடைந்தது.