/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி வெற்றி ஊர்வலம்
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி வெற்றி ஊர்வலம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி வெற்றி ஊர்வலம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி வெற்றி ஊர்வலம்
ADDED : மே 18, 2025 02:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் மாணவ,மாணவிகளின் தேசியக்கொடி வெற்றி ஊர்வலம் நடந்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி நமது பலத்தை உலகத்திற்கு தெரியப்படுத்தினர். அதற்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் விதமாக மாணவ, மாணவியர் பங்கேற்ற தேசியக்கொடி வெற்றி ஊர்வலம் நேற்று நடந்தது.
ஊர்வலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ பாபு, அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.