/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய உயர்திறன் பயிற்சி பயிலரங்கம்
/
தேசிய உயர்திறன் பயிற்சி பயிலரங்கம்
ADDED : ஆக 10, 2025 11:37 PM

புதுச்சேரி : புதுச்சேரி எலைட் விளையாட்டு பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான உயர்திறன் பயிற்சி பயிலரங்கம் தட்டாஞ்சாவடி தனியார் பள்ளியில் நடந்தது.
மாநில கைப்பந்து சங்கத் தலைவரும், சபாநாயகருமான செல்வம் தலைமை தாங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை இயக்குநர் வைத்தியநாதன், மாநில ஒலிம்பிக் சங்க செயலாளர் தனசேகரன், மூத்த பயிற்சியாளர் வேணுகோபால், இணை செயலாளர் முருகையன், பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறைத் தலைவர் வசந்தி, பேராசிரியர் ராம் மோகன் சிங், பயிற்சியாளர் ரகோத்தமன், தேசிய நடுவர் சுகுமாரன் கருத்துரை வழங்கினர்.
இதில் கைப்பந்து பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அனுபவம் மிக்க கைப்பந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். பயிலரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை எலைட் விளையாட்டு பயிற்சி மைய இயக்குநர் எபினேசர் செய்திருந்தார்.

