தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தே.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து தேசிய தலைவர்கள் பிரசாரம் 

 தே.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து தேசிய தலைவர்கள் பிரசாரம் 

 தே.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து தேசிய தலைவர்கள் பிரசாரம் 


ADDED : ஏப் 03, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று (3ம் தேதி) பிரதமர் உட்பட தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாகேஸ்வரன் அறிக்கை:

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிரசாரம் செய்ய உள்ள னர்.

இன்று (3ம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரியில் மாலை 4:00 மணிக்கு நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்று கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

நாளை (4ம் தேதி) பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஊசுடு, முதலியார்பேட்டை, மணவெளி, அரியாங்குப்பம், வில்லியனுார் தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

வரும் 5ம் தேதி காலை தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் குஷ்பூ ஊசுடு தொகுதியிலும், மதியம் காரைக்கால், திருநள்ளாறு தொகுதியில் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், குஷ்பூ ஆகியோர் மாலை மணவெளி தொகுதியிலும், பொதுக் கூட்டத்தில் பேசுகின்றனர்.

வரும் 6ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மண்ணடிப்பட்டு தொகுதி வேட்பாளரை ஆ தரித்து திருக்கனுாரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 7ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா காலாப்பட்டு தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேரணியில் கலந்து கொள்கிறார். முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு, நிரவி திரு பட்டினம் பேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us